டச்சு மாடல் அழகி இவானா குடும்பத்தினருக்கு RM 1.1 மில்லியன் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 29: டச்சு மாடல் அழகி இவானா ஸ்மித்தின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தத் தவறியதற்காக, அவரது குடும்பத்தினருக்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு இங்குள்ள உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ரோஸ் மாவர் ரோசெய்ன், அரசாங்கமும் காவல்துறையும் தங்கள் கடமைகளைச் செய்வதில் அலட்சியமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டார்

பொது இழப்பீடுகளாக RM500,000 மற்றும் மோசமான மற்றும் முன்மாதிரியான இழப்பீடுகளாக மொத்தம் RM600,000 என்பதோடு  RM100,000 செலவுகளுடன் சேர்த்து வழங்க நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

கொலைக்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் சூழ்நிலை ஆதாரங்கள் இருந்தபோதிலும், புலனாய்வு அதிகாரி பைசல் அப்துல்லா "தன்னிச்சையாக ஸ்மித்தின் மரணத்தை தற்கொலை என்று வகைப்படுத்தினார்" என்று ரோஸ் மாவர் தனது தீர்ப்பில் கூறினார்.

2019 ஆம் ஆண்டில் ஸ்மித்தின் மரணத்திற்கான காரணத்தை விசாரிக்க காவல்துறைக்கு அறிவுறுத்துமாறு மற்றொரு உயர் நீதிமன்றம் சட்டத்துறை அலுவலகத்திற்கு உத்தரவிட்டதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த விசாரணை 2019 முதல் தேக்க நிலையில் இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என்று ரோஸ் மாவர் கூறினார்.

ஸ்மித்தின் தாயார் கிறிஸ்டினா கரோலின் ஜெரார்டா ஜோஹன்னா வெர்ஸ்டாப்பன், 2020 ஆம் ஆண்டு குடும்பத்தின் சார்பாக வழக்குத் தொடர்ந்தார்.

18 வயதான ஸ்மித், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி capSquare Residenceஸின் 20வது மாடியில் இருந்து விழுந்து ஆறாவது மாடியில் இறந்து கிடந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *