வீட்டில் தீ! – 20 மோட்டார் சைக்கிள்கள் நாசம்!
- Shan Siva
- 19 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 18: பேராக் பாரிட் புந்தார், கம்போங் கெடாவில் உள்ள தித்தி செரோங், லோரோங் பாரிட் 1 -ல் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்ட வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20 மோட்டார் சைக்கிள்கள் சேதமாகின.
இச்சம்பவம் குறித்து
பின்னிரவு மணி 1.50-க்கு தங்களுக்கு அழைப்பு
கிடைத்ததாகவும் அதில், 20-க்கு 70 அடி பரப்பளவை கொண்ட அவ்வீடு ஏறத்தாழ 70 விழுக்காடு தீக்கிரையானதாகவும், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக்
மாநில செயல்பாட்டு உதவி இயக்குநர்
ஷஸ்லின் முஹமட் ஹனாஃபியா தெரிவித்தார்.
அதிகாலை 5.50-க்கு தீ முழுமையாக அணைக்கப்பட்ட வேளையில்
இதில் எந்தவோர் உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



