வீட்டில் தீ! பாட்டி - பேரன் மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 2: பிந்துலு,  ஜாலான் சுங்கை நிகுவில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு முதிய பெண்மணியும் அவரது பேரனும் இறந்து கிடந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 61 வயதான டான் நியாரிங் மற்றும் 15 வயதான மெல்போர்ன் ஜெயசி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சம்பவ இடத்திலிருந்து உடல்களை மீட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தது என்று செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாலை 1.10 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தவுடன், தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும், 31 அறைகளைக் கொண்ட தற்காலிக தொழிலாளர் குடியிருப்புகள் அழிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பிந்துலு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *