புசுட் பாரு பூர்வகுடி கிராமத்தில் தீயில் வீடுகள் சாம்பலாகின!

- Muthu Kumar
- 20 May, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், மே 20-
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இங்கு புகட் பாரு பூர்வகுடி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடியிருப்பு வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இந்தத் தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று காலையில் பூர்வ குடி கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தீயினால் வீட்டை இழந்த குடியிருப்பாளர் பஹாரி கோலேக்கிடம் உதவித் தொகையாக காசோலையை எடுத்து வழங்கி அவருக்கு ஆறுதல் கூறினார்.
இந்தப் பூர்வகுடி கிராமம் பந்திங் சட்டமன்றத் தொகுதியில் இருப்பதால் சட்டமன்ற மக்கள் மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணனிடம் முதலில் இந்தச் சம்பவம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.அவருடன் வருகை தந்த கோல லங்காட் மாவட்ட பூர்வகுடி இலாகா அதிகாரி முகமட் நோர் ஹாஜி யாக்கோப் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
Di Bukit Baru, Pendang, kebakaran memusnahkan beberapa rumah di kampung orang asal. Ahli jawatankuasa kebajikan memberi bantuan wang kepada mangsa. Punca kebakaran sedang disiasat, dan bantuan lanjut akan diberikan oleh pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *