நவம்பர் 29 சபா தேர்தல்! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 16: சபா மாநிலத்தின் 17வது தேர்தல் வரும் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (EC) இன்று அறிவித்துள்ளது.

முன்கூட்டிய வாக்காளர்கள் நவம்பர் 25 ஆம் தேதி வாக்களிக்கலாம் என்றும் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன் தெரிவித்தார்.

அக்டோபர் 6 ஆம் தேதி சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு RM116.8 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ரம்லான் கூறினார்.

மொத்தம் 17,84,843 சபா மக்கள்  வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய தேர்தல்களைப் போலவே, தேர்தல் செயல்முறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை பேஸ்புக் லைவ் வழியாகவும் தேர்தல் ஆணையம் நேரடியாக ஒளிபரப்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது1

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *