2035 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் மலிவு விலை வீடுகளைக் கட்ட அரசு இலக்கு!
- Muthu Kumar
- 01 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 1 -
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2026ஆம் ஆண்டு தொடங்கி 2035ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் மலிவு விலை வீடுகளைக் கட்ட அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
இத்திட்டம், மத்திய, மாநில அரசாங்கங்கள் மற்றும் தனியார் மேம்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படும் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இதன்வழி, அதிகமான மக்கள் வசதியான மற்றும் பாதுகாப்பான வீடுகளில் வாழ முடியும் என்று, மக்களவையின் நேற்று 13ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்தபோது
நிதி அமைச்சருமான அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
வீட்டைக் கட்டும் செலவைக் குறைப்பதற்கும் செயல்படுத்துதலை விரைவுபடுத்துவதற்கும், 'தொழில்துறை மயமாக்கப்பட்ட கட்டட அமைப்பு' மற்றும் 'கட்டட ஒருங்கிணைந்த நிர்வகிப்பு' தொழில்நுட்பங்கள் இக்கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



