13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இனி NO - சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு
- Shan Siva
- 15 Oct, 2025
கோலாலம்பூர், அக் 15: 13 வயதுக்குட்பட்ட பயனர்கள் சமூக ஊடகக் கணக்குகளை
வைத்திருக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, Know-Your-Customer (e-KYC) எனப்படும் மின்னணு அடையாள சரிபார்ப்பு அமைப்புகளை
செயல்படுத்த அனைத்து சமூக ஊடக தளங்களிலும் மலேசியா விரைவில் கட்டாயப்படுத்தும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை
ஆன்லைனில் பாதுகாப்பதையும், தளங்களால்
நிர்ணயிக்கப்பட்ட சமூக வழிகாட்டுதல்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி
செய்வதையும் நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை என்று தகவல் தொடர்புத்துறை
அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
தேவையை
செயல்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க MCMC அடுத்த வாரம் சமூக ஊடக நிறுவனங்களுடன் ஒரு
சந்திப்பை நடத்தும் என்று ஃபஹ்மி கூறினார்.
ஆன்லைன் மோசடிகள், சூதாட்டம் மற்றும் போலி விளம்பரங்கள் போன்ற தீங்கு
விளைவிக்கும் உள்ளடக்கங்களைத் தடுக்க e-KYC முக்கியமானது என்று அவர் கூறினார்.
பல தளங்கள் மோசடிகளுக்காக குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் 78% முகநூல் சம்பந்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



