எல்லை பாதுகாப்பை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்துகிறது!
- Muthu Kumar
- 20 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 20-
நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள தென் பிலிப்பைன்சில், தயார்நிலைப் பணிகளை, குறிப்பாக சபா, பாங்கி தீவில் பாதுகாப்பை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நிச்சயமற்ற புவிசார் அரசியலினால், அப்பகுதியில் பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"புவிசார் அரசியல் நிலைமை நிச்சயமற்றது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அண்மையில், சபா அருகே தென் பிலிப்பைன்சில், பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க ராணுவத் தயார்நிலை அதிகரித்துள்ளது.
நான் அதிபர் (பிலிப்பைன்ஸ்) பொங்பொங் மார்கோஸை (ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தொடர்பு கொண்டேன். சீனாவின் தாக்குதலை எதிர்கொள்வதால் அவ்வாறு இருப்பதாக அவர் கூறினார்.ஆனால், இது நிச்சயம் கவலையளிக்கிறது. மேலும், நமது பாதுகாப்பைப் பராமரிக்க பாங்கி தீவு, சபாவில் நம் தயார்நிலையை அதிகரிக்க நம்மை வலியுறுத்துகிறது". என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



