அரசு மருத்துவமனைகள், கிளினிக்குகள் 2029 ஆம் ஆண்டுக்குள் மின்னணு மருத்துவ பதிவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 16: 

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் 2029 ஆம் ஆண்டுக்குள் மின்னணு மருத்துவ பதிவு அமைப்பைக் கொண்டிருக்கும் என்று சுகாதார அமைச்சர் சூல்கிஃப்லி அஹ்மத்  தெரிவித்தார்.

மொத்தம் 150 மருத்துவமனைகள் மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.இந்த அமைப்பை செயல்படுத்துவது அடுத்த ஆண்டு தொடங்கி 16 மருத்துவமனைகளுடன் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

சுகாதார மருத்துவமனைகள் கிளவுட் அடிப்படையிலான மருத்துவ மேலாண்மை அமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.இதுவரை, 160 சுகாதார மருத்துவமனைகள் இந்த அமைப்பைக் கொண்டுள்ளன, இந்த ஆண்டு இறுதிக்குள் எண்ணிக்கை 200 ஆக உயரும் என்றும், 2029 ஆம் ஆண்டுக்குள், தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவமனைகள், சமூக மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புற மருத்துவமனைகள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த அமைப்பு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மடானி நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு புத்ராஜெயாவில் இதனைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *