ஊட்டச்சத்து தரத்தின்படி உணவை வகைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம்!
- Muthu Kumar
- 06 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 6-
ஊட்டச்சத்து தரத்தின்படி உணவை வகைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. மக்களிடையே ஆரோக்கியமான உணவு குறித்த புரிதலை அதிகரிப்பதற்கு இச்செயல்முறை வகை செய்யும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கீஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
இறுதியில் அதுதான் நடக்கும். நாம் ஊட்டச்சத்து வகைகளை அறிமுகப்படுத்தும்போது ஏ உணவு வகைகள் மிகச் சிறந்ததாக இருக்கும். பி-இல் இருந்து தொடங்குவதைக் காண்போம். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் முன்பு பரிந்துரைக்கப்பட்ட அதே மனநிலையில் ஆரோக்கியமற்றவற்றை வகைப்படுத்துவோம்.
நாங்கள் குறிப்பிட்டதை ஆரோக்கியமற்றது அல்லது பி தரம் என வைப்போம். இதன் மூலம் மக்கள் அவற்றைத் தொடக்கூடாதா, சாப்பிடக்கூடாதா என்பதை அறிந்து கொள்ள முடியும்," என்றார் அவர். அதோடு, ஆரோக்கியமான தேர்வு சின்னத்தைப் பதிப்பிப்பதிலும் சுகாதார அமைச்சின் அணுகுமுறையில் அடங்கும் என்று அவர் விவரித்தார். நேற்று, நாடாளுமன்றத்தில், ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அனைவரின் கடமை எனும் மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் டாக்டர் சுல்கிஃப்லி செய்தியாளர்களிடம் பேசினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



