கப்பல் இடைமறிப்பில் 9 மலேசியர்களின் விடுதலைக்கு அரசாங்கம் கடும் முயற்சி!
- Muthu Kumar
- 11 Oct, 2025
புத்ராஜெயா, அக். 11
காஸாவை நோக்கி மனிதநேய உதவிப்பொருட்களைக் கொண்டு சென்று கொண்டிருந்த கப்பல்களை இம்மாதம் 8 ஆம் தேதியன்று இஸ்ரேல் இடைமறித்து நிறுத்தியதோடு அக்கப்பல்களில் இருந்த ஒன்பது மலேசியர்களைக் கைது செய்துள்ளது.
அவர்களை விடுவிப்பதற்கு மலேசிய அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஜோர்டானின் அம்மான் மற்றும் துருக்கியின் அங்காரா ஆகியவற்றில் உள்ள மலேசியத் தூதரகத்தின் உதவியோடு அவர்களை விடுவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை விடுவிக்கச் செய்து அவர்களை உடனடியாக தாயகம் கொண்டு வருவதற்கும் அனைத்துலகச் சட்ட நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளதும் என்றும் ஒன்பது மலேசியர்களும் பூரண உடல்நலத்துடன் உள்ளனர் என்றும் மலேசிய குடிமக்களின் பாதுகாப்புக்கும் உடல்நலத்திற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
ஃபிரீடம் ஃபுளோட்டில்லா கோலிஷன் மற்றும் தவ்சண்ட் மெட்லீன்ஸ் டு காஸா எனும் அவ்விரு கப்பல் அணிகளிலும் இருபத்தைந்து நாடுகளைச் சேர்ந்த 150 இயக்கவாதிகள் இடம்பெற்றிருந்தனர். அவர்களுள் ஒன்பது பேர் மலேசியர்கள் ஆவர்.அவர்கள் அனைவரும் தற்போது இஸ்ரேலின் நெக்யேவ் நகரிலுள்ள கெட்சியோட் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



