துன் டைம் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களை அரசு வெளியிட வேண்டும்! - மகாதீர் வலியுறுத்து
- Shan Siva
- 28 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 28: துன் டைம் ஜைனுதீன் செய்ததாகக் கூறப்படும்
குற்றங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர்
மகாதிர் முகமது வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள்
நிதியமைச்சருமான தூன் டைம் கடந்த நவம்பரில் காலமான பிறகும் டைமின் நற்பெயர்
தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுவதால் டாக்டர் மகாதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டைமின்
அறிவிக்கப்படாத சொத்துக்கள் மீதான மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை குறித்து மகாதீர் இவ்வாறு
குறிப்பிட்டார்.
டைமுடன்
தொடர்புடைய குறைந்தது RM4.5 பில்லியன்
சொத்துக்கள் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக MACC தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
இதில் இங்கிலாந்தில் உள்ள RM758 மில்லியன் சொத்துகளும் அடங்கும்.
டைம்
அமைச்சராவதற்கு முன்பு பணக்காரராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவர்
அமைச்சராக நியமிக்கப்பட்டபோது தனது வணிக நலன்களை விட்டுக்கொடுக்கவும் செய்தார் என மகாதிர்
கூறினார்.
டைம் அமைச்சராக
இல்லாத பிறகுதான் மீண்டும் வணிகத்தைத் தொடங்கினார் என்று மகாதிர் தெரிவித்தார்.
சிறப்பு
சலுகைகளைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுவதைத் தவிர்ப்பதற்காக டைம் வெளிநாடுகளில்
வணிகம் செய்தார் என்று மகாதிர் கூறினார். டைம் தான் வணிகம்
செய்த நாடுகளில் நடந்த எந்த ஊழலுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை என்றும் மகாதீர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



