அரசு ஊழியர்களின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! - கியூபெக்ஸ் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

 கோத்தா பாரு, மே 14: நேற்று ஏற்பட்ட கோர விபத்தைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் இயக்க நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்யுமாறு அரசு ஊசியர் சங்கங்களின் சம்மேளனமான கியூபெக்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சீட் பெல்ட்கள், பயணிகள் வரம்புகள் மற்றும் மிகவும் பொருத்தமான போக்குவரத்து போன்ற வாகன பாதுகாப்பு அம்சங்களை மதிப்பாய்வு உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்புடன் கூடிய உறுதியான வாகனங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் இன்று பொது சுகாதாரச் சட்டம் 2025 அமலாக்க கருத்தரங்கை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 (OSHA 1994)  விதியின் படி முதலாளிகள் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய வேண்டும் என்று அட்னான் குறிப்பிட்டார்.

Cuepecs menggesa kerajaan kaji semula prosedur keselamatan pengangkutan kakitangan awam susulan nahas semalam. Penilaian termasuk tali pinggang keledar, had penumpang dan kenderaan sesuai. Vokasional berisiko perlu guna kenderaan lebih selamat. OSHA 1994 turut ditekankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *