தேசியக் கடனைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்-அன்வார்!

top-news
FREE WEBSITE AD

மூவார், ஜூலை 28-

தேவையற்ற கடன்தொகையை பெறுவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை.கடன்சுமையினால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அது அவசியமாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வலியுறுத்தினார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் பத்தாயிரம் கோடி வெள்ளியை நாடு கடன்வாங்கியிருந்தது. ஆனால், 2023ஆம் ஆண்டில் அது ஒன்பதாயிரம் கோடி வெள்ளியாகவும் 2024 ஆண்டில் எண்ணாயிரம் கோடி வெள்ளியாகவும் அது குறைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்னும் கூடுதலாக கடன்பெறுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாம் தொடர்ந்து கடன் பெற்றுக் கொண்டிருந்தால், அது இளைய தலைமுறையினருக்கு சுமையைக் கொடுப்பதாக இருக்கும் என்று மூவாரில் நாடு தழுவிய நிலையிலான தேசிய மாதக் கொண்டாட்டத்தின் தொடக்கவிழாவில் பேசியபோது பிரதமர் குறிப்பிட்டார்.

ஜொகூரின் மூவாரில் டத்தாரான் தஞ்சோங் இமாஸ் சதுக்கத்தில் இந்தத் தொடக்கவிழா நடைபெற்றது.கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தை (பெல்டா) அமைப்பதற்கும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் துன் அப்துல் ரசாக் போன்ற முன்னாள் தலைவர்கள் கடன்பெற்றதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கடன் பெற்றுக் கொண்டு அதனை ஏப்பம் விடும் நபர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டியது அவசியமாகும் என்றார் அன்வார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *