மாநில அரசாங்கங்கள் பரிந்துரைத்த வளர்ச்சித் திட்டங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும்!
- Muthu Kumar
- 29 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 29-
ஆர்.எம்.கே எனப்படும் 13ஆவது மலேசியத் திட்டம், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் மாநில அரசாங்கங்கள் பரிந்துரைத்த வளர்ச்சித் திட்டங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
முன்வைக்கப்படும் திட்டங்களைக் கேட்டு மதிப்பீடு செய்வதற்காக, மாநில அரசாங்கங்களுடன் தொடர் கலந்துரையாடல்களை நடத்தும் அணுகுமுறையை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.
"நான் மாநிலங்களுக்குச் செல்கிறேன். 'அன்வார் துருன் ஆனால் மாநிலங்களின் தேவைகளைக் கேட்கச் செல்கிறேன், கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ், கெடா
உள்ளிட்ட மந்திரி பெசார்களின் வேண்டுகோளின் பேரில், அவர்கள் பல முன்னுரிமைகளைப் பரிந்துரைத்தனர்.
சில நேரங்களில் இவை மத்திய அரசாங்கம், நிதி அமைச்சின் முன்னுரிமைகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் நான் அவற்றை மாற்றியமைத்து, மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் ஒன்று அல்லது இரண்டு முன்னுரிமைகளை ஏற்றுக்கொள்வேன். இவற்றை இந்த அக்டோபரில் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பேன்" என்றார் அவர்.
நேற்று. மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின் போது அன்வார் அவ்வாறு கூறினார்.மாநில அரசாங்கங்கள் பரிந்துரைக்கும் தேவைகளின் அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



