பராமரிப்பாளர் இன்றி சாலையோரங்களில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் பிடிக்கப்பட்டன!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

சிப்பாங், அக்.5-

பராமரிப்பாளரின்றி இரவு நேரங்களில் வாகனங்களுக்கு இடையூறும் ஆபத்தும் ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில், சுற்றித் திரிந்த மாடுகளை அமலாக்க அதிகாரிகள் தேடிப் பிடித்து பொதுமக்கள் பாதுகாப்பு - கருதி நகராண்மைக் கழகத்தின் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரி  ரஹ்மான் பாசீர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு இங்கு, ஜெண்டாரம், சௌஜானா கேஎல்ஐஏ வட்டாரங்களில் 20  க்கும் மேற்பட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சாலை நடுவே அங்குமிங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு மாடு பிடிபட்டு நகராண்மைக் கழகத்தின் வர்கனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

வாகனமோட்டிகள் சிலர் வழங்கிய புகார் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு மாடுகள்/எருமைகள் பாதுகாப்பு ச் சட்டம் 4(1)(எ) இன் கீழ் விலங்குகளைப் பிடித்து அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை அமலாக்க அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருவதாக ரஹ்மான் தெரிவித்தார்.

பிடிபட்ட மாடுகள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உரிமையாளர் அதற்கான அபராதத் தொகையை முகப்பிடக் கவுண்டரில் செலுத்தி விட்டு அதன் அத்தாட்சி ரசீதை அமலாக்க அதிகாரிகளிடம் காட்டி மாட்டை ஒட்டிச் செல்லலாம் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *