பேருந்தில் கைப்பேசியை மின்னேற்றம் செய்து சிறுவன் மரணம்-மின்சார முறையைப் பொருத்துவதில் அலட்சியம்தான் காரணம்!
- Muthu Kumar
- 24 Jul, 2025
போர்ட் கிள்ளான், ஜூலை 24-
விரைவுப் பேருந்துகள், பயண பேருந்துகள் சம்பந்தப்பட்ட கூடுதல் மின்சார வயரிங் பொருத்துதல் பணிக்கான ஆவண தயார்படுத்தலை அடுத்தாண்டு ஜனவரி தொடங்கி சாலைப் போக்குவரத்துத் துறை கட்டாயப்படுத்தும்.
புள்ளி விவரத்தில் இதுவரை கட்டம் கட்டமாக 65,520 விரைவு பேருந்து பயண பேருந்துகள் பின்பற்றுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பினாங்கு சென்ட்ரல் முனையத்தில் ஒரு விரைவு பேருந்து சோக்கெட்டில் கைப்பேசியை மின்னேற்றம் செய்யும் போது மின்னதிர்ச்சி ஏற்பட்டு மரணமுற்றதில் இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதாகச் சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
விசாரணை செய்யப்பட்டதில் தகுதி வாய்ந்த அதிகாரியின் கண்காணிப்பின்றி அப்பேருந்தில் மாற்று மின்னோட்ட மின் அமைப்புகளை நிறுவுவதில் அலட்சியப் போக்கு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சாலைப் போக்குவரத்துத் துறையுடன் தரைப் பொது போக்குவரத்து நிறுவனம் (அபாட்), மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம் (மிரோஸ்), சீரிம் பெர்.. கணினிமய வாகன பரிசோதனை மையம் (புஸ்பாகோம்), எரிசக்தி ஆணையம் ஆகியவை இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சிறப்புப் பணிக்குழுவை இதற்கு முன்பு அமைத்தன. விசாரணை செய்யப்பட்டதில்
தொழில்நுட்பம் மற்றும் வயரிங் அமைப்பு ரீதியில் பின்பற்றாமை அம்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெலுக் கோங்கில் பேருந்து கட்டுமானத் தொழிற்சாலைக்கு வருகையளித்த போது செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



