தம்பினில் 10 மீட்டர் குழியில் விழுந்து சிறுவன் மரணம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 3: நெகிரி செம்பிலான் தம்பின்  பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த 10 மீட்டர் ஆழமுள்ள கழிவுநீர் குழியில் இருசக்கர வாகனம் பாய்ந்ததில், பின்புறத்தில் அமர்ந்திருந்த 14 வயது சிறுவன் நேற்று இரவு உயிரிழந்தான்.

பெரித்தா ஹரியான் செய்தியின்படி, இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.10 மணியளவில், ஜாலான் பூங்கா தஞ்சூங் பகுதியில் நிகழ்ந்தது. உயிரிழந்த சிறுவன், தனது 17 வயது அண்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு உணவு முடித்த பின்னர் கோலா இனா பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்குச் செல்லும் வழியில், வளைவில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.

விபத்தின் போது வாகனம் கழிவுநீர் குழியில் மோதியதால், பின்புறத்தில் அமர்ந்திருந்த சிறுவன் குழிக்குள் தூக்கி எறியப்பட்டான். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அவன் மீட்கப்பட்டான் என அவர் அறிக்கையில் கூறினார்.

இந்த விபத்தில், 17 வயது அண்ணனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், காயமடைந்த சிறுவன் தம்பின் மருத்துவமனையில் இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *