பள்ளி மாணவர்களுக்கு RM100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் சிறப்புத் திட்டம்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 22,

தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரையில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட PAK எனும் நமது குழந்தைகள் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு மடானி அரசு RM100 மில்லியன் சிறப்பு நிதி வழங்குவதாக இணை நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan தெரிவித்தார். PAK திட்டமானது மாணவர்களின் வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல் திறன் மேம்படுதல், SPM மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டல், இடைநிலைப்பள்ளியைத் தொடராமல் விடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்துதல் போன்ற முக்கிய 3 அம்சங்களைக் கொண்டு இயங்குவதால் கடந்த ஆண்டு 2,500 பள்ளிகளைச் சேர்ந்த 85,000 மாணவர்களுக்குப் பயனளித்திருப்பதால் இந்த கூடுதல் சிறப்பு நிதியை வழங்குவதாக இணை நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan தெரிவித்தார்.

கல்வி அமைச்சுடன் நிதி அமைச்சும் இணைந்து இந்த 3 அம்சங்களைக் கொண்டு PAK எனும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதால் அடுத்த ஆண்டும் முதல் நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தவிருப்பதாகவும் இணை நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan தெரிவித்தார்.கடந்த 2024 ஆம் ஆண்டில் 10,119 மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றதாகவும் அவர்களில் 89% மாணவர்கள் SPM தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதையும் இணை நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan சுட்டிக்காட்டினார். அடுத்தக்கட்டமாக இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து தேசிய மொழி, வரலாறு, கணிதம் ஆகிய தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என இணை நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan தெரிவித்தார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *