பக்காத்தான் ; பாரிசான் கூட்டணி முறிவா? பொறுமையாக இருங்க! டி.ஏ.பி!
- THINAGAREN SANGGAREN
- 17 May, 2026
மே 17,
ஒற்றுமை கூட்டணியில் பக்காத்தான் ஆதரவாளர்களும் பாரிசான் ஆதரவாளர்களும் முரண்களில் ஈடுபட்டாலும் பினாங்கில் பாரிசானும் பக்காத்தானும் சுமூகமான உறவில் இருப்பராகப் பினாங்கு மாநில முதலமைச்சரும் பினாங்கு மாநிலப் பக்காத்தான் தலைவருமான Chow Kon Yeow தெரிவித்தார். பக்காத்தான் பாரிசான் கூட்டணிகளின் தலைவர்கள் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கிறோம். இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களிடையே நிலவும் சிக்கல்கள் ஆட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என Chow Kon Yeow வலியுறுத்தினார்.
நிலையான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை அந்த அரசு வழங்க முடியும். இளைஞர்கள் இந்த ஆட்சியை நம்புவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து பினாங்கில் பாரிசானும் பக்காத்தானும் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தி வருவதாக Chow Kon Yeow தெரிவித்தார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் பொதுத்தேர்தலில் நம்பிக்கையான வாக்குகளைப் பக்காத்தான் பாரிசான் கூட்டணி பெறும் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பினாங்கு மாநில முதலமைச்சரும் பினாங்கு மாநிலப் பக்காத்தான் தலைவருமான Chow Kon Yeow தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



