பாக்காத்தான் கூட்டணிக்குள் விரிசல்! பெரிக்காத்தானுக்கு வெற்றி!
- Thinagaren Sanggaren
- 28 Sep, 2025
செப்டம்பர் 28,
பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டால் அது பெரிக்காத்தானுக்கு வெற்றியை ஏற்படுத்தி தந்துவிடும் என அமானா கட்சியின் பொதுச் செயலாளர் Muhammad Faiz Fadzil எச்சரிக்கை விடுத்தார். ஜொகூரில் பெரிக்காத்தான் நுழைய முடியாது என்றாலும் ஜொகூர் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டால் அது ஜொகூரில் பெரிக்காத்தானுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று தரும் என Muhammad Faiz Fadzil எச்சரிக்கை விடுத்தார்.
பாஸ் பெர்சத்து கட்சிகளுக்கிடையிலான பிரதமர் வேட்பாளர் சர்ச்சை பக்காத்தானில் இல்லை. பக்காத்தானின் ஒரே பிரதமர் வேட்பாளர் அன்வார் மட்டும் தான் என்பதை அமானாவும் பி.கே.ஆரும் டி.ஏ.பியும் உணர்ந்திருப்பதாகவும் Muhammad Faiz Fadzil தெரிவித்தார். ஆனாலும் கூட்டணியில் இருக்கும் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்களுக்கிடையில் மோதல் இருப்பதையும் Muhammad Faiz Fadzil சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



