ஈரான் போர் பதற்றத்துக்கு மத்தியில் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்

top-news
FREE WEBSITE AD

ஈரான் போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வளைகுடா நாடுகளுக்கான முக்கிய தூதரகப் பயணத்தை தொடங்கியுள்ளார். பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை முன்னெடுக்க அவர் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த சுற்றுப்பயணம் ஏப்ரல் 15 முதல் 18 வரை நடைபெறுகிறது.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல், குறிப்பாக ஈரான் தொடர்பான போர் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்த நிலையில் பிராந்திய தலைவர்களுடன் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என பாகிஸ்தான் அரசு கருதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் போது இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு நிலைமை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா-ஈரான் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பாகிஸ்தான் தீவிர தூதரக முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *