மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் விளையாட்டுப் போட்டி
- Tamil Malar (Reporter)
- 23 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 23-
மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடந்த முடிந்த விளையாட்டு போட்டியில் சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக போட்டியின் இயக்குநர் எஸ்.பிரசாத் மணி ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து 16 ஆவது முறையாக, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் போட்டி விளையாட்டுகளில் மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பல மாநிலங்களிலிருந்து வருகை புரிவது வழக்கமான ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் போட்டி வெறுமனே முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நோக்கத்தில் மட்டும் ஏற்பாடு செய்யாமல், முன்னாள் மாணவர்கள் ஆரோக்கியத்தைப் பேணவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் இயக்கத்தின் தலைவர் சிவபாலன் கூறினார்.
இம்முறை இந்த விளையாட்டுப் போட்டியில் காற்பந்து, பூப்பந்து மட்டுமல்லாது பிக்கல் போல் விளையாட்டும் இடம்பெற்றிருந்தது. மேலும் காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி மதியம் 3 மணிக்கு நிறைவை நாடியது. வெற்றியாளர்களுக்கு மேனாள் மலாயாப் பல்கலைக்கழக அதிகாரி திரு. அம்பிகாபதி பரிசினை எடுத்து வழங்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



