சட்டத்தை மீறாதீர்! MP- களுக்குச் சபாநாயகர் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 12,

நாட்டின் சட்டத்தை அனைத்து மக்களும் பின்பற்றுவது போல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மக்களவைச் சபாநாயகர் Tan Sri Johari Abdul அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலியுறுத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் சட்டத்தை மதித்து பொறுப்புடன் இருக்கும்படி Tan Sri Johari Abdul  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நினைவூட்டினார். தீர்க்கப்பட்ட சர்ச்சைகளை மீண்டும் எழுப்பி நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல் முறையான ஆதாரங்களுடன் விவாதங்களை மேற்கொள்ளும்படி Tan Sri Johari Abdul  நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

நான் நாடாளுமன்றத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறேன். இந்த நாடாளுமன்றத்திற்கான சட்ட வழிமுறைகளும் உள்ளது. அதனைப் பின்பற்றுவது உங்களை விடவும் தனக்கு அதிகமாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அப்படியெனில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக் இருக்கும் நீங்கள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க சட்டத்தை மீறியும் முக்கியமாக நாடாளுமன்றத்திற்கு என கடைப்பிடிக்கும் சட்ட விதிகளைப் பின்பற்றி விவாதங்களை நடத்தும்படியும் , Tan Sri Johari Abdul  வலியுறுத்தினார். நான் சட்டத்திற்குக் கட்டுப்படுகிறேன், அதனால் நான் எதையும் இழக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என Tan Sri Johari Abdul எச்சரிக்கை விடுத்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *