கட்சித் தாவல் சட்டத் திருத்தமா? நான் தயார்! பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 14, 

கட்சித் தாவல் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தாம் தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் உறுதியளித்தார். விசுவாசமிக்க அரசியல் தலைவர்களை உருவாக்கவும் விசுவாசமற்றவர்களின் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டவும் எனக்கு எந்தவொரு தயக்கமுமில்லை என அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது நடைமுறையில் இருக்கும் கட்சித் தாவல் சட்டம் பல்வேறு திருத்தங்களுடன் மறுமொழிவு செய்யப்பட்டது. இந்த கட்சித் தாவல் சட்டத்தில் பல்வேறு உள்ளீடுகளை மடானி அரசு செய்துள்ளதாகவும் ஆனால் அதேவேளையில் சட்டம் தனிநபர் சுதந்திரத்திற்கு எதிராக இருக்க கூடாது என்பதையும் அன்வார் நினைவூட்டினார்.

கட்சித் தாவல் சட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு 5 புதிய விதிகளுடன் வெளியிடப்பட்டது. அதனுள் 34 புதிய சட்டங்கள் திருத்தப்பட்டிருந்தன. அதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் 5 புதிய விதிகளுடன் 57 சட்டங்கள் புதிதாக இணைக்கப்பட்டது.. இப்போது 2025 ஆம் ஆண்டு கடந்த வாரம் வரையில் 4 புதிய விதிகளுடன் அது தொடர்புடைய 6 சட்டங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருத்தங்கள் எல்லாமே நாடாளுமன்றத்தில் 2 புதிய மசோதாக்களுடன் 11 முறை தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் கட்சித் தாவல் சட்டத்தை முழுமையாக உள்வாங்கிய பின்னர் எந்தவொரு நாடாளுமன்ற விவாதத்தையும் தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *