ஸம்ரி வினோத், பிர்டாவுஸ் வோங் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – PPP

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 8-

சர்ச்சைக்குரிய ஸம்ரி வினோத் மற்றும் பிர்டாவுஸ் வோங் மீது போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் முன்னேற்றக் கட்சி (PPP)  கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் குற்ற அச்சத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் இவர்களைக் காவல் படை கைது செய்து விசாரித்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக குறுகிய கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். அந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், PPP கட்சி தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்தார்.

மேலும், இந்த விவகாரம்  கோயில் பிரச்சினை தொடர்பாக மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பயம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் சட்டமும் நீதித்துறை அமைப்பும் இருக்கின்ற நிலையில், எந்தவொரு நபரும் சட்டத்திற்கு மேல் அல்ல என்றும் லோகா பாலா மோகன் வலியுறுத்தினார்.

எனவே, சமூக அமைதியையும் சட்ட ஒழுங்கையும் காக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் உடனடியாக விசாரித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் PPP தலைவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *