UPKO கட்சி பக்காத்தான் ஹரப்பானில் (PH) இருந்து உடனடியாக வெளியேற முடிவு!
- Muthu Kumar
- 11 Nov, 2025
சபா, நவ 11:
UPKO கட்சி பக்காத்தான் ஹரப்பானில் (PH) இருந்து உடனடியாக வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற சிறப்பு உச்ச மன்றக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கு முறையாகத் தெரிவிக்கப்படும் என்றும் UPKO பொதுச் செயலாளர் டத்தோ நெல்சன் W அங்காங் கூறினார்.
இருப்பினும், இந்தக் காலகட்டம் முழுவதும், சபாவின் 40 சதவீத வருவாய் உரிமைகளை செயல்படுத்துவதற்கான கோரிக்கை, சபா மற்றும் சரவாக்கிற்கான நாடாளுமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கு கோரிக்கை, அத்துடன் PH சபாவின் நிர்வாக சுயாட்சியை செயல்படுத்தத் தவறியது தொடர்பாக தேசிய அளவில் UPKO மற்றும் PH பங்காளிக் கட்சிகளுக்கு இடையே விளக்கம், கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளில் இடைவெளிகள் இருப்பதாக அவர் கோர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தப் போராட்டம், மலேசியா ஒப்பந்தம் 1963 (MA63) மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் சபாவின் உரிமைகள், குறிப்பாக மாநிலத்திலிருந்து கூட்டாட்சி வருவாயில் 40 சதவீதத்தைப் பெறுவதற்கான உரிமையை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.மேலும், UPKO தலைவர் டத்தோ எவோன் பெனடிக் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



