பாஸ் கட்சியின் அடுத்த மாநாடு பினாங்கில் நடக்கும்! டி.ஏ.பிக்குப் பாஸ் கட்சியின் பலம் புரியும்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 9,

பாஸ் கட்சி தனது அடுத்த ஆண்டு விழாவைப் பினாங்கில் பிரம்மாண்டமாக நடத்தவிருப்பதாகப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் DATUK SERI TAKIYUDDIN HASSAN றிவித்துள்ளார். பினாங்கில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துக் கொண்டிருக்கும் டி.ஏ.பி கட்சிக்குப் பாஸ் கட்சியின் பலத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காகப் பினாங்கு மாநிலத்தைத் தேர்வு செய்திருப்பதாக TAKIYUDDIN HASSAN தெரிவித்தார். கடந்த 1951 ஆம் ஆண்டு இதே பினாங்கு மாநிலத்தில் பாஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்றும் மீண்டும் பினாங்கில் வரலாற்றுப்பூர்வமிக்க 75 ஆவது ஆண்டு விழாவைப் பாஸ் கட்சி நடத்தும் என்றும் TAKIYUDDIN HASSAN தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பாஸ் கட்சியின் பேராளர் மாநாட்டைக் கிளாந்தான் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் TAKIYUDDIN HASSAN தெரிவித்தார். பினாங்கில் பாஸ் கட்சியினர் திரண்டால் அது மாநில அரசைக் கலக்கம் அடைய வைக்கும். பினாங்கில் மெல்ல மெல்ல பாஸ் கட்சி கைப்பற்றுவதை உறுதிப்படுத்தும் விதமாகப் பாஸ் கட்சியின் 75 ஆவது ஆண்டு விழாவைப் பினாங்கில் நடத்த முடிவெடுத்திருப்பதாக TAKIYUDDIN HASSAN தெரிவித்தார். பாஸ் கட்சியின் ஆதரவால் பினாங்கு அதிரும். பினாங்கை ஆட்சி செய்யும் டி.ஏ.பி கலங்கும் என TAKIYUDDIN HASSAN அறிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *