பெண் கைதிகளின் உடலை முழுமையாக மறைக்க வேண்டும்! – பாஸ் கட்சி வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 17,

குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் கைது செய்யப்படும் இஸ்லாமிய பெண்களின் உடலை முழுமையாக மூடும் அளவிற்கான உடைகளைக் காவல்துறை வழங்க வேண்டும் என பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர்  Nuridah Salleh வலியுறுத்தினார். பெண் கைதிகளின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் முகம் உடல் போன்ற பெண்களின் பாகங்கள் மறைக்கும்படியான HIJAB போன்ற உடையைக் காவல்துறை வழங்க வேண்டும் என்றும்  Nuridah Salleh தெரிவித்தார். 

இந்த உடைகளை நீதிமன்றத்திற்குள்ளும் வெளியேயும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாகக் காவல்துறையின் விசாரணைக் கைதியாகத் தடுத்து வைக்கப்படும் பெண்களுக்கு HIJAB கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் Nuridah Salleh வலியுறுத்தினார். சிறையில் இருக்கும் பெண் கைதிகளின் பாதுகாப்பையும் HIJAB அணிவதால் உறுதிப்படுத்த முடியும் என பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர்  Nuridah Salleh தெரிவித்தார். அரசாங்கமும் நீதித்துறையும் இந்த முன்மொழிவை ஏற்றுக் கொண்டு பெண்களுக்கு HIJAB உடையைக் கட்டாயப்படுத்த வேண்டும் என Nuridah Salleh கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *