பாஸ்+பாரிசான் கூட்டணி? ம.இ.கா & ம.சீ.ச வாய் திறக்குமா? டி.ஏ.பி கேள்வி
- THINAGAREN SANGGAREN
- 17 Jul, 2026
ஜூலை 17,
பாஸ் கட்சியும் பாரிசான் கூட்டணியும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது பாரிசான் கூட்டணி கட்சிகளான ம.இ.காவும் ம.சீ.சவும் வாய் திறக்காதது ஏன் என டி.ஏ.பி பொதுச் செயலாளர் ANTHONY LOKE கேள்வி எழுப்பினார். நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாரிசான் போட்டியிடாத குறிப்பிட்ட 11 சட்டமன்ற தொகுதிகளில் PERIKATAN அதன் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாரிசான் பாஸ் கட்சிகளுக்கிடையிலான தேர்தல் ஒப்பந்தத்தைக் காண்பிக்கிறது.
PAKATAN கூட்டணி 36 சட்டமன்றங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. பாரிசான் 25 சட்டமன்றங்களில் மட்டுமே வேட்பாளரை அறிவித்துள்ளது. பாரிசான் போட்டியிடாத எஞ்சிய 11 சட்டமன்றங்களிலும் PERIKATAN வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாரிசானின் ம.இ.கா 2 சட்டமன்றங்களிலும், ம.சீ.ச 7 சட்டமன்றங்களிலும் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் TAN SRI MUHYIDDIN தலைமையிலான BERSATU கட்சி சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாகவும் விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



