பாரிசான் உறுப்புக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை! முடிவைப் பின்னர் அறிவிக்கிறோம்! – பாஸ் கட்சி உறுதி!
- Thinagaren Sanggaren
- 12 Sep, 2025
செப்டம்பர் 12,
பாரிசான் நேசனலிலிருந்து அதன் உறுப்புக் கட்சி ஒன்று பெரிக்காத்தானுடன் சேர உறுதியளித்திருப்பதாகவும் அது குறித்தான பேச்சுவார்த்தைகள் சம்மந்தப்பட்ட கட்சியுடன் நடத்தப்பட்டு வருவதாகவும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். பேச்சுவார்த்தையில் மட்டுமே இருக்கிறோம் என்பதால் அவர்களின் விண்ணப்பம் எழுத்துப்பூர்வமாக இல்லை என்பதால் சம்மந்தப்பட்ட கட்சியின் பெயரை இப்போதைக்கு வெளியிட முடியாது என Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.
பாரிசானிலிருந்து வெளியேற அந்த கட்சி உறுதியாக இருப்பதாகவும் பெரிக்காத்தானுடன் இணைவதில் பல கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னமே அந்த கட்சி நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதால் எந்தவோர் அறிக்கையும் இல்லாது வாய் வார்த்தைகளை நம்பி மட்டுமே அக்கட்சியின் தலைமையுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். இப்போதைக்கு அந்த கட்சியின் பெயரைச் சொல்வதால் பெரிக்காத்தானுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றாலும் அந்த கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து பின்னர் வெளிப்படையாக அறிவிக்கிறோம் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னமே அந்த கட்சி விண்ணப்பம் செய்திருந்தது. அப்போதும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பொதுத்தேர்தலுக்குப் பின்னரும் அந்த கட்சி பெரிக்காத்தானில் சேர விண்ணப்பம் செய்திருந்தது. அப்போதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சமீபத்திலும் மீண்டும் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது, அந்த கட்சி என நான் அடையாளம்படுத்துவது எந்த கட்சி என ஊகித்துக்கொள்ளுங்கள் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man அந்த கட்சியின் பெயரைச் சொல்லாமல் சூசகமாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



