வெடிப்புக்குப் பொறுப்பேற்று மெந்திரி பெசார் விடுமுறைக்குச் செல்லட்டும்! பாஸ் கட்சி!

- Sangeetha K Loganathan
- 06 Apr, 2025
ஏப்ரல் 6,
PUTRA HEIGHTS எரிவாயுக் குழாய் வெடிப்பிற்குப் பெறுப்பேற்று சிலாங்கூர் மெந்திரி பெசார் AMIRUDING SHARI விடுமுறைக்குச் செல்ல வேண்டுமென பாஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் AHMAD FADHLI SHAARI தெரிவித்துள்ளார். PUTRA HEIGHTS வெடிப்பிற்கு முக்கியமானக் காரணமாகச் சிலாங்கூர் மாநில அரசு என்றும் அரசாங்கத்தின் மெத்தனம் முக்கிய காரணம் என்றும் AHMAD FADHLI SHAARI தெரிவித்தார்.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்களுக்குப் பாதிப்பை விளைவிக்கும் எந்தவொரு செயல்திட்டங்களையும் முன்னெடுக்க கூடாது எனும் பொறுப்பு இருப்பதாகவும், அதனை மறந்து Amirudin Shari தலைமையிலான மாநில அரசு வருவோர் போவோருக்கெல்லாம் கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதித்ததாகவும் AHMAD FADHLI SHAARI குற்றம்சாட்டினார். இதனை உணர்ந்து Putra Heights வெடிப்பிற்கான விசாரணை முடியும் வரையிலாவது Amirudin Shari விடுமுறையில் இருப்பது மட்டுமே ஒரே தீர்வு என பாஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் AHMAD FADHLI SHAARI தெரிவித்துள்ளார்.
PAS mendesak Menteri Besar Selangor, Amirudin Shari, untuk bercuti susulan insiden letupan paip gas di Putra Heights. Ahmad Fadhli Shaari menyalahkan kerajaan negeri atas kelulusan projek berisiko dan kelewatan tindakan pihak berkuasa yang menyebabkan tragedi itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *