PAS கட்சித் தலைகீழாக நின்றாலும் பகாங்கில் ஆட்சி அமைக்க முடியாது! பகாங் மெந்திரி பெசார்!

top-news

ஜூலை 10,


பகாங்கில் பாஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்று என அம்னோ உதவித் தலைவரும் பகாங் மாநில மெந்திரி பெசாருமான Datuk Seri Wan Rosdy Wan தெரிவித்தார். தற்போது பகாங் மாநிலத்தின் அரசாங்கத்திற்கு எதிராகப் பாஸ் கட்சி Teraju Pahang 2.0 என முழக்கமிடுவதால் யாருக்கு என்ன பயன் என Datuk Seri Wan Rosdy Wan கேள்வி எழுப்பினார். பகாங்கில் ஆட்சி என்பது நிலையாக இருப்பதாகவும் எந்தவோர் அரசியல் கட்சியின் தலையீடுமில்லாமல் மிதமாகப் பகாங் மாநில ஆட்சி நடைபெறுவதாக Datuk Seri Wan Rosdy Wan தெரிவித்தார்.

இப்போது பாஸ் கட்சி முழக்கமிடும் Teraju Pahang 2.0 எனும் சொல்லு என்ன பொருள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் கூட்டத்தோடு கூட்டமாக அவர்கள் ராகத்தோடு பாடுவார்கள். அவர்கள் பாடுவது இனிமையாக இருந்தாலாவது மக்கள் மயங்குவார்கள், ஆனால் அப்படி இனிமையாகவும் ஒன்றுமில்லை, பாஸ் கட்சி பாடினாலும் கூட்டமாகக் கோஷமிட்டாலும் தலைகீழாக நின்றாலும் பகாங்கில் ஆட்சி அமைக்க முடியவே முடியாது என அம்னோ உதவித் தலைவரும் பகாங் மாநில மெந்திரி பெசாருமான Datuk Seri Wan Rosdy Wan தெரிவித்தார்.


Menteri Besar Pahang Wan Rosdy Wan Ismail menyindir PAS bahawa walaupun mereka melaungkan Teraju Pahang 2.0 mereka tidak mampu menawan Pahang. Beliau yakin kerajaan negeri stabil tanpa gangguan parti lain walau PAS cuba raih sokongan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *