மலேசியாவிடம் ரஷ்யா மன்னிப்புக் கேட்க வேண்டும்! பாஸ் கட்சி வலியுறுத்து!

top-news

மே 13,

மலேசியாவின் MH17 பயணிகள் விமானத்தை ரஷ்யாவின் ராணுவம் சுட்டு வீழ்த்தியிருப்பதைச் சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையமான ICAO இன்று உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில் மலேசிய அரசாங்கத்திடமும் மலேசிய மக்களிடமும் ரஷ்யாவின் அதிபர் Vladimir Putin பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரும் Pasir Mas நாடாளுமன்ற உறுப்பினருமான Ahmad Fadhli Shaari வலியுறுத்தினார். தற்போது அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றிருக்கும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim ரஷ்யாவிடம் அதன் தவறுக்கு மன்னிப்புக் கேட்கும்படி வலியுறுத்த வேண்டும் என Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் வான் தளத்தில் மலேசியாவின் மலேசியாவின் MH17 விமானம் 43 மலேசியர்கள் உட்பட 298 பயணிகளுடன் ரஷ்யாவால் சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவில் வைத்து Datuk Seri Anwar Ibrahim இதனைச் செய்ய வேண்டும் என்றும் ரஷ்யாக்காரர்களுடன் புகைப்படம் எடுப்பதையும் சுற்றுலா மேற்கொள்வதை மட்டும் Datuk Seri Anwar Ibrahim செய்ய கூடாது என்றும் ரஷ்யாவிடம் Datuk Seri Anwar Ibrahim அடிபணிந்து முதலீட்டைப் பெறுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்காமல் ரஷ்யாவை மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரும் Pasir Mas நாடாளுமன்ற உறுப்பினருமான Ahmad Fadhli Shaari வலியுறுத்தினார்.

PAS menggesa Presiden Rusia Vladimir Putin memohon maaf secara terbuka kepada rakyat dan kerajaan Malaysia atas insiden MH17. Ahmad Fadhli Shaari juga menggesa Perdana Menteri Anwar Ibrahim menekankan perkara itu semasa lawatan rasmi beliau ke Rusia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *