HADI AWANG கைக்காட்டுபவரே பெரிக்காத்தானின் தலைவர்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 3,

பாஸ் கட்சியின் தலைவரும் மூத்த அனுபவமிக்க அரசியல் தலைவருமான Tan Sri Abdul Hadi Awang பெரிக்காத்தானின் தலைவராக வேண்டும் என பெர்லிஸ் மாநிலப் பெரிக்காத்தான் தலைவர் Datuk Seri Shahidan Kassim வலியுறுத்தினார். தோக் குரு என அழைக்கப்படும் ஹடி அவாங் அனுபவமிக்க அரசியல்வாதி. தற்போதைய காலத்தில் முதிர்ந்த அரசியல்வாதிகளில் ஹடி அவாங் மிகுந்த அனுபவமிக்கவராகவும் இருப்பதால் அவர் பெரிக்காத்தானை வழிநடத்த வேண்டும் என Datuk Seri Shahidan Kassim தெரிவித்தார். 

ஆனால் ஹடி அவாங் பெரிக்காத்தான் தலைவராகும் விருப்பத்தில் இல்லை என்றாலும், அவர் கைக்காட்டும் நபர் பெரிக்காத்தானின் தலைவராக வேண்டும் என்றும் அவர் யாரைக் காட்டினாலும் அது சரியான முடிவாக இருக்கும் என Datuk Seri Shahidan Kassim தெரிவித்தார். ஹடி அவாங் கெடா மாநில மெந்திரி பெசாரான சனூசியைக் கைக்காட்டினாலும் சரி, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்நை கைக்காட்டினாலும் சரி, திரங்கானுவின் மெந்திரி பெசார் அஹமாட் சம்சூரி முக்தாரைக் கைக்காட்டினாலும் சரி, ஹடி அவாங்கின் உத்தரவைப் பெர்லிஸ் மாநிலப் பெரிக்காத்தான் முழுமையாக ஏற்கும் என Datuk Seri Shahidan Kassim தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *