காரணம் சொல்லி அன்வார் தப்பிக்க வேண்டாம்! – பாஸ் கட்சி வலியுறுத்து!

top-news

ஜூன் 30


நீதித்துறையில் தலைமை நீதிபதி உட்பட முக்கிய நீதிபதிகள் இன்னும் அமர்த்தபடாமல் இருப்பது அன்வாரின் மெத்தனத்தைக் காட்டுவதாகப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். மடானி அரசாங்கத்தால் சட்டம் நிலைநிறுத்தப்படும் என மேடைக்கு மேடை அன்வார் சூளுரைக்கிறார், ஆனால் தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், கூட்டாட்சி நீதிமன்றத் தலைவர்களின் பொறுப்புகள் காலியாக இருப்பதை Datuk Seri Takiyuddin Hassan சுட்டிக்காட்டினார். 

நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பொறுப்பேற்கும் வரையில் முந்தைய நீதிபதிகளின் பணி சேவையின் கால அளவீட்டை அரசாங்கம் நீட்டிப்புச் செய்யும். இது இயல்பான நடைமுறை. அரசாங்கம் புதிய தலைமை நீதிபதியை இன்னும் அடையாளம் காணவில்லை என்றால் தற்போதைய நீதிபதிகளின் சேவையை நீட்டிப்பதில் அன்வாருக்கு என்ன சிக்கல்? எனும் கேள்வியை Datuk Seri Takiyuddin Hassan முன்வைத்தார். நீதித்துறை அமைப்பில் உள்ள நடைமுறை, ஓய்வு பெறும் வயதை நெருங்கும் உயர் நீதிபதிகளுக்கான சேவை நீட்டிப்பு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும் என்பதை மறந்து விட்டாரா அல்லது அன்வாருக்கு ஆதரவான நீதிபதியை அவர் தேடிக் கொண்டிருக்கிறாரா என பெரிக்காத்தான் சட்டப் பிரிவு தலைவருமான Datuk Seri Takiyuddin Hassan சாடினார்.


PAS mendakwa kelewatan pelantikan Ketua Hakim Negara dan hakim-hakim kanan lain menunjukkan kelemahan pentadbiran Anwar. Takiyuddin Hassan persoal kenapa kerajaan tidak segera perpanjang kontrak hakim sedia ada jika belum melantik pengganti, serta sindir Anwar tidak boleh berdalih.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *