யாரைக் கேட்டு அன்வார் அறிவிக்கிறார்? - பாஸ் கட்சி கேள்வி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 24,

நேற்று பிரதமர் அன்வார் அறிவிப்பு செய்த மக்கள் நலத்திட்டங்கள் மக்களைத் திசை திருப்பும் அரசாங்கத்தின் தந்திரம் என பெரிக்காத்தானின் Pasir Mas  நாடாளுமன்ற உறுப்பினர் Ahmad Fadhli Shari சாடினார். அன்வாரின் ஆட்சியீல் மக்கள் சுமை அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி மக்களை ஒருங்கிணைத்து எதிர்கட்சியினரிடமிருந்து அன்வார் தப்பிப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என Ahmad Fadhli சுட்டிக்காட்டினார். 


நேற்று அன்வார் செய்திருந்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்தான எந்தவொரு விவாதங்களும் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் ஆண்டின் இடையில் இம்மாதிரியான அறிவிப்புகள் வெளிவரும் என தெரிவிக்கப்படவில்லை. திடீரென சுமார் RM 5 பில்லியன் மதிப்பிலான நலத்திட்டங்கள் எனும் போர்வையில் மக்களிடையே எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிட்டு தலா RM 100 ரிங்கிட்டை வழங்கி ஏமாற்றுகிறது இந்த மடானி அரசு என பாஸ் கட்சியில் தலைமை தகவல் தொடர்பாளருமான Ahmad Fadhli சாடினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *