பாஸ் கட்சியால் பிரதமராக முடியாது! அன்வார் சும்மா இருக்கமாட்டார்! – மகாதீர் விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 02 Nov, 2025
நவம்பர் 2,
பாஸ் கட்சி அதன் பிரதமர் வேட்பாளரை இப்போது அறிவித்தால் அன்வார் சும்மா இருக்கமாட்டார் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார். பாஸ் கட்சிக்குப் பெரிக்காத்தானின் ஆதரவு தேவை. திரங்கானு, கிளாந்தான், பெர்லீஸ், கெடா ஆகிய மாநிலங்களில் வலுவான மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தாலும் பாஸ் கட்சிக்கும் மற்ற மாநிலங்களில் மிதமான ஆதரவே உள்ளது. இதனால் பாஸ் கட்சிக்குப் பெரிக்காத்தான் தேவை என்பதைப் பாஸ் கட்சி உணர வேண்டும் என மகாதீர் தெரிவித்தார். மேலும் இப்போதைக்குப் பாஸ் கட்சி பிரதமர் வேட்பாளர் குறித்தானச் சர்ச்சைகளைக் கிளப்பாமல் இருப்பது நல்லது என மகாதீர் தெரிவித்தார்.
இப்போது மட்டும் பாஸ் கட்சி ஒரு தலைவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தினால் ஆட்சியில் இருக்கும் அன்வார் அமைதியாக இருக்கமாட்டார். பாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரைக் குறிவைத்து அரசுத் துறையின் மூலமாக அவர் மீது அழுத்தங்கள் கொடுக்க அன்வார் தயங்கமாட்டார். அன்வாரின் அழுத்தம் எந்த அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். அப்படியான அழுத்தத்தைப் பாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் தாங்குவாரா என மகாதீர் வினவினார். பாஸ் கட்சியால் தனித்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதால் அடுத்த பொதுத்தேர்தல் வரையில் பாஸ் கட்சிக் காத்திருப்பது நல்லது என முன்னாள் பிரதமர் மகாதீர் பாஸ் கட்சிக்கு வலியுறுத்தினார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



