பாஸ் கட்சியிலிருந்து பெரிக்காத்தான் தலைவர்! - பாஸ் கட்சி

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

பாஸ் கட்சி பெரிக்காத்தானை வழிநடத்த வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari அறிக்கை வெளியிட்டுள்ளார். பெரிக்காத்தான் தலைவர் பொறுப்பிலிருந்து முகைதீன் விலகுவதாக அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே Fadhli Shaari இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். முகைதீன் பதவி விலகியதும் இப்போது பெரிக்காத்தான் கூட்டணிக்குத் தலைமை தேவை. கூட்டணிக் கட்சிகளைச் சரிசமமாக வழிநடத்தும் ஒரு தலைவர் பெரிக்காத்தானுக்குத் தேவை.

பெரிக்காத்தானின் தலைவராக, அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை விடவும் அடுத்தக்கட்ட தலைவர்களை நியமித்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என Fadhli Shaari தெரிவித்தார். அப்படியானத் தலைவர்கள் பாஸ் கட்சியில் இருக்கின்றனர். பெரிக்காத்தான் கூட்டணியில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சியாகப் பாஸ் கட்சி திகழ்கிறது. பாஸ் கட்சியின் தலைமையில் பெரிக்காத்தான் இயங்கினால் அடுத்த 16ஆவது பொதுத்தேர்தலுக்கானப் புதிய தேர்தல் வியூகத்தை அமைக்கவும் அது பொருத்தமாக இருக்கும் என Fadhli Shaari தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சியினரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகிய Tan Sri Muhyiddin Yassinக்குத் தமது நன்றியையும் புதிய பெரிக்காத்தான் தலைவருக்குத் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் Fadhli Shaari தெரிவித்தார். ஜனவரி 1 முதல் முகைதீன் பெரிக்காத்தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகைதீன் அறித்திருப்பது அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள் பரபரப்பை ஏற்படுத்தினாலும் சிறிய கட்சிகளான GERAKAN, MIPP போன்ற கட்சிகள் கலக்கத்தில் உள்ளனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *