சபா தேர்தலில் 12 இடங்களில் போட்டியிடும் பாஸ்!
- Thinagaren Sanggaren
- 20 Oct, 2025
அக்தோபர் 20,
சபாவின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி குறைந்தபட்சம் 12 சட்டமன்றங்களில் போட்டியிடும் என பாஸ் கட்சியின் உதவித் தலைவர் Nik Amar Abdullah தெரிவித்தார். பாஸ் கட்சி பெர்சத்துவுடன் இணைந்து சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என Nik Amar Abdullah உறுதிப்படுத்தினார். பெரிக்காத்தான் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகள் குறித்து ஆலோசனையை மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் பாஸ் கட்சி குறைந்தபட்சம் 12 சட்டமன்றங்களில் போட்டியுடும் என Nik Amar Abdullah உறுதியளித்தார்.
தேர்தல் ஆணையம் நவம்பர் 15 சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் நவம்பர் 25 முன் வாக்கு பதிவுகளும் 29 நவம்பர் தேர்தல் என்றும் அறிவித்துள்ளது. பெரிக்காத்தான் கூட்டணியில் பாஸ் பெர்சத்து கெராக்கான் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் என்றும் ஒற்றுமை கூட்டணியில் பி.கே.ஆர், டி.ஏ.பி, அம்னோ, ம.சீ.ச ஆகிய கட்சிகள் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



