அன்வார் பதவி விலக வலியுறுத்தி பேரணி!

top-news

ஜூன் 16,


பிரதமர் Dato’ Seri Anwar Ibrahimயின் மடானி ஆட்சி மீது நம்பிக்கை இழந்தவர்களை ஒருங்கிணைத்து அன்வாருக்கு எதிராகப் பேரணியை நடத்தவிருப்பதாகப் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரும் Alor Setar நாடாளுமன்ற உறுப்பினருமான Afnan Hamimi Dato’ Taib அறிவித்துள்ளார். அன்வார் தலைமையிலான ஒற்றுமை கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு 935 நாள்கள் கடந்து விட்டது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, மக்களின் அன்றாட வாழ்க்கை மடானி அரசாங்கத்தின் நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக Afnan Hamimi Dato’ Taib குற்றம்சாட்டினார். 

அன்வார் பதவி விலக வேண்டி இந்த ஒற்றுமை பேரணியை ஜூலை 26 நடத்த பாஸ் கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் Afnan Hamimi Dato’ Taib தெரிவித்தார். அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களைக் கட்டுப்படுத்த மடானி அரசு தோல்வி அடைந்ததாகவும் பொருளாதார அமைச்சர் இல்லாமல் நாட்டின் பொருளாதாரம் எப்படி மீட்டெடுக்கப்படும் என்கிற கேள்வியை Afnan Hamimi Dato’ Taib முன்வைத்துள்ளார். அமைச்சரவையிலிருந்து இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியிருப்பது சாதாரணமானது அல்ல. இரண்டு அமைச்சரவைகள் செயல்படாமல் இருப்பதைத் தெரிந்து கட்சி அரசியலுக்காக அன்வார் அமைதியாக இருப்பதாகவும் அரசாங்கத்தின் நிர்வாகம் சீர்குலைந்து இருப்பதாகவும் Afnan Hamimi Dato’ Taib குற்றம்சாட்டினார்.


Ketua Pemuda PAS, Afnan Hamimi, mengumumkan perhimpunan menuntut peletakan jawatan PM Anwar Ibrahim pada 26 Julai. Beliau mendakwa kerajaan Madani gagal menunaikan janji pilihan raya dan mengurus kos sara hidup serta ekonomi negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *