வேறொருவர் நிலத்தில் அமைக்கப்பட்ட கோயில்களையும் இடிக்க வேண்டும்! - பாஸ் கட்சி!

- Sangeetha K Loganathan
- 26 Mar, 2025
மார்ச் 26,
சொந்த நிலத்தில் கட்டப்படாத ஆலயங்கள் இடிக்கப்படுவதைப் பாஸ் கட்சி ஆதரிப்பதாகப் பாஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார். இதை மத விவகாரமாகப் பார்க்க கூடாது என்றும் இது ஒரு வகையான நில அபகரிப்பாக அரசாங்கம கருத வேண்டும் என்றும் Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.
மற்றவர்கள் நிலத்தில் முக்கியமாக நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதி வாங்காமல் கோயில்களைக் கட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் சம்மந்தப்பட்ட கோயில்களை அரசாங்கம் இடிப்பதையும் பாஸ் கட்சி ஆதரிப்பதாக Ahmad Fadhli Shaari தெரிவித்தார். இது சட்டமாக இருந்தாலும் இதைச் செயல்படுத்ததில் சிக்கல்கள் ஏற்படுவதால் இது மத பிரச்சனையாகப் பார்க்கப்படுவதாகவும் Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.
PAS menyokong tindakan merobohkan rumah ibadat yang dibina di atas tanah milik orang lain tanpa kebenaran. Ahmad Fadhli Shaari menegaskan isu ini bukan masalah agama tetapi melibatkan pencerobohan tanah yang perlu ditangani secara tegas oleh kerajaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *