அமைச்சர் Steven Sim மீது பாஸ் கட்சி நீதிமன்ற வழக்கு!

top-news

ஜூலை 4,


மனிதவள அமைச்சர் Steven Sim தன் மீது அவதூறு பரப்பியதாக Sungai Buloh பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் Zaharudin Muhammad நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். நீதிமன்ற வழக்கின் முன்னதாகத் தன் மீது அவதூறு பரப்பியதற்காக Steven Sim மன்னிப்புக் கேட்க வேண்டுமெனும்படியாந கோரிக்கை கடிதத்தையும் (LOD) Steven Simமிடம் வழங்கியிருப்பதாக Zaharudin Muhammad தெரிவித்தார். 7 நாள்களுக்குள் STEVEN SIM மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் RM1.5 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தனக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை மீட்டுக்கொள்ள வேண்டும் என Sungai Buloh பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் Zaharudin Muhammad கோரிக்கை விடுத்துள்ளார். 

7 நாள்களுக்குள் STEVEN SIM மன்னிப்புக் கேட்க தவறினால் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என Sungai Buloh பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் Zaharudin Muhammad நினைவூட்டினார். முன்னதாக தேசிய ராணுவத்தில் உயரிய பொறுப்பில் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்ப் நியமிக்கப்பட்டதற்கு எதிராகத் தாம் கருத்து தெரிவித்திருப்பதாக தம் மீது தவறான அவதூறு பரப்பியதாக மனிதவள அமைச்சர் Steven Sim மீது Sungai Buloh பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் Zaharudin Muhammad குற்றம் சாட்டினார். சீன வம்சாவளியைச் சேர்ந்தவர் ராணுவத்தில் உயரிய பதவிகளைப் பெறுவது குறித்து தாம் எந்தவொரு தவறான கருத்துகளையும் பகிரவில்லை என Sungai Buloh பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் Zaharudin Muhammad தெரிவித்தார்.


Zaharudin Muhammad, Penyelaras PAS Sungai Buloh, memfailkan saman fitnah terhadap Menteri Sumber Manusia Steven Sim. Beliau menuntut permohonan maaf, bayaran ganti rugi RM1.5 juta dan penarikan semula kenyataan dalam tempoh tujuh hari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *