பாஸ் கட்சியின் சிறந்த அரசியல் தலைவர் சனூசி! – பாஸ் கட்சி புகழாரம்!
- Thinagaren Sanggaren
- 15 Sep, 2025
செப்டம்பர் 15,
பாஸ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் எந்தவொரு போட்டியும் இல்லாமல் சுமூகமாக முடிந்ததற்குக் கெடா மாநில மெந்திரி பெசார் சனூசியின் பங்கு முக்கியமானது என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim தெரிவித்தார். பாஸ் கட்சியின் உதவித் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட இருந்த சனூசி விட்டுக்கொடுத்ததால் உதவித் தலைவருக்குத் தேர்தல் இல்லாமல் சுமூகமாக முடிந்ததாக துவான் இப்ராகிம் நினைவூட்டினார்.
சனூசியின் இந்த முடிவு மிகவும் மதிக்கத்தக்கது என்றும் மற்ற தலைவர்களைக் காட்டிலும் சனூசியின் இந்த அரசியல் முதிர்ச்சி பாஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஓர் உதாரணம் என்றும் துவான் இப்ராகிம் சுட்டிக்காட்டினார். சனூசி உதவித் தலைவராக வேண்டும் என்பதில் எந்தவொரு சிக்கலும் இல்லை, ஆனால் மற்றவர்களுக்கு வழிவிடுவது என்பது அரசியலில் அவ்வளவு எளிதாக நிகழ்ந்திடுவதில்லை. இதுவரையில் சனூசி 3 முறை பாஸ் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து அதனைக் கட்சியின் நலனுக்காக மீட்டுக்கொண்டிருப்பதைத் துவான் இப்ராகிம் நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



