அன்வார் மீது ரபிஸி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்குப் பாஸ் கட்சி ஆதரவு!
- Sangeetha K Loganathan
- 09 Jul, 2025
ஜூலை 9,
தலைமை நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதாக முன்னாள் பொருளாதார அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramli குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதைப் பாஸ் கட்சி ஆதரிப்பதாகவும் Datuk Seri Rafizi Ramliக்குப் பாஸ் கட்சி ஆதரவளிப்பதாகவும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். அன்வாருடன் இருந்தவர்களே அன்வாரின் செயல்பாடுகளில் குறைகள் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.
அன்வாருக்கு எதிராக Datuk Seri Rafizi Ramli எடுத்திருக்கும் இந்த துணிச்சல் மிக்க குற்றச்சாட்டுகளுக்காகப் பாஸ் கட்சி அவருடன் இருக்கும் என்றும் ஜூலை 26 அன்வாருக்கு எதிராக நடைபெறவிருக்கும் எதிர்ப்பு பேரணியில் Datuk Seri Rafizi Ramliயும் இணைந்து அவரின் குற்றச்சாட்டை முன் வைக்கும்படியும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார். இந்த மாதிரியான நேரத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவு Datuk Seri Rafizi Ramliக்கு இருக்க வேண்டும் என்பதை அவர் மறுக்கமாட்டார் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man வெளிப்படையாக அழைப்புவிடுத்துள்ளார்.
PAS menyatakan sokongan kepada Datuk Seri Rafizi Ramli berhubung dakwaannya terhadap campur tangan parti politik dalam pelantikan Ketua Hakim Negara. PAS menegaskan akan bersama Rafizi dalam himpunan membantah Anwar pada 26 Julai ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



