தேசிய பள்ளிகளில் தமிழ் & சீன மொழிகள் கற்பிக்க வேண்டும்! பாஸ் கட்சி வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 14,

தேசிய பள்ளிகளில் தமிழ் பாடத்திட்டத்தையும் சீன பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார். இது மலாய் மாணவர்களிடையே தமிழ் சீனம் மொழிகள் குறித்தான புரிதலை மேம்படுத்தும் என்பதால் தேசிய பள்ளிகளில் இந்த இரு மொழிகளும் கற்பிக்கப்பட  வேண்டும் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man மடானி அரசாங்கத்தை வலியுறுத்தினார். தேசிய பள்ளிகளில் தமிழ் பாடத்திட்டத்தையும் சீன பாடத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தினால் மலாய்க்காரர்களுக்குத் தான் அது நன்மையை அளிக்கும் என அவர் தெரிவித்தார். 

ஒருவருக்கு ஒருவர் மொழிகளைக் கற்பதால் பிறர் பேசும் போது நமக்குள் ஏற்படும் அவநம்பிக்கையை அது போக்கும் என தாம் நம்புவதாகவும் தேசிய பள்ளிகளில் தமிழ் பாடத்திட்டத்தையும் சீன பாடத்திட்டத்தையும் அமல்படுத்துவதில் கல்வி அமைச்சு சிரத்தை எடுக்க வேண்டும் என்றும் Datuk Seri Tuan Ibrahim Tuan Man கேட்டுக்கொண்டார். அதே வேளையில் அனைத்து மலேசியர்களும் தேசிய மொழியின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *