தேசிய பள்ளியில் தமிழ் சீனம் கற்பிக்கப்படுவதை அறியாமல் பிதற்றும் பாஸ் கட்சி! டி.ஏ.பி கிண்டல்!
- Thinagaren Sanggaren
- 14 Sep, 2025
செப்டம்பர் 14,
தேசிய பள்ளிகளில் தமிழ்ப் பாடமும் சீன பாடமும் கற்பிக்கப்படுவதை அறிந்திருக்காமல் பாஸ் கட்சியின் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man தேசிய பள்ளிகளில் தமிழ் & சீனம் ஆகிய பாடங்களைக் கல்வி அமைச்சு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதும் உலறலின் உச்சம் என டி.ஏ.பியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lip Lim Eng தெரிவித்தார். மேடையில் எதையாவது பேசுவது இந்த பாஸ் கட்சிக்கு வழக்கமாகிவிட்டதாக Lip Lim Eng சாடினார். திடீரென பாஸ் கட்சி தமிழ் மொழி மீதும் சீன மொழி மீதும் அக்கறை செலுத்துவதாக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lip Lim Eng தெரிவித்தார்.
பள்ளிகளில் என்ன நடக்கிறது, மாணவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதைக் கூட இந்த பாஸ் கட்சியினர் அறிந்திருக்கவில்லை என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lip Lim Eng சாடினார். உண்மையில் பாஸ் கட்சியின் துணைத் தலைவருக்குத் தமிழ் மொழியின் மீதும் சீன மொழியின் மீதும் அக்கறை எல்லாம் ஏதுமில்லை, மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளைப் பெற இப்படி மலிவான அரசியலைக் கையிலெடுக்கிறார் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lip Lim Eng தெரிவித்தார்.
தேசிய பள்ளிகளில் 1998 ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழியும் சீன மொழியும் மூன்றாம் ஆண்டு முதல் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு 120 நிமிடங்கள் தமிழ் சீன பாடம் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



