அரசாங்கத்தை அமைக்க பாஸ் கட்சிக்குத் தகுதி இல்லை! பாஸ் கட்சிக்குப் பேராசை! – RAFIZI RAMLI!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 27,

அரசாங்கத்தை அமைக்கும் திறன் பாஸ் கட்சிக்கு இல்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli கருத்து தெரிவித்துள்ளார். பாஸ் கட்சிக்கு அடிப்படையில் என்ன தகுதி இருக்கிறது என Datuk Seri Rafizi Ramli கேள்வி எழுப்பினார். இவர் ஆளும் மாநிலங்களில் என்ன வளர்ச்சியைப் பாஸ் கட்சி பதிவு செய்துள்ளது? ஒரு நிர்வாகத்தை வழிநடத்த பொருளாதாரக் கட்டமைப்புத் தேவை. பாஸ் கட்சியிடம் எந்தவொரு பொருளாதாரக் கொள்கைகளோ, வருமானத்தை ஈட்டுவதற்கான எந்தவொரு முன்னெடுப்புகளோ இல்லை என Datuk Seri Rafizi Ramli சுட்டிக்காட்டினார். 

பாஸ் கட்சி அனுதாபத்தை மட்டுமே தேடி மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்று வருவதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். கிளாந்தான் திரங்கானுவை ஆட்சி செய்து வரும் பாஸ் கட்சி அந்த மாநிலத்தில் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடையவில்லை. இதுவரையும் முந்தைய அரசாங்கம் கட்டி எழுப்பிய வளத்தை வைத்து அதன் மூலமாகப் பெறும் வருவாயைக் கொண்டு மட்டுமே ஆட்சி நடத்துகிறது. கிளாந்தானிடம் 12 அரசு நிறுவனங்கள் உள்ளது. இந்த 12 நிறுவனங்களும் முந்தைய மாநில அரசால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் மதிப்பை விடவும் அதன் வருவாய் மிகவும் குறைவு. திறமையான நிர்வாகத்தை அந்த நிறுவனங்கள் கொண்டிருந்தால் அதன் வருவாய் தற்போதைய வருவாயை விடவும் அதிகமாக இருந்திருக்கும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *