பாஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாமே! அம்னோ யோசனை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 26,

முன்னாள் பிரதமர் நஜீப்பின் சிறை தண்டனை வழக்குடன் பெர்லீஸில் ஆட்சிக் கலைக்கப்பட்ட நிலையில் பாஸ் கட்சியும் அம்னோவும் இணைந்து மீண்டும் ஆட்சியில் அமைக்கலாமே என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரும் மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான  டத்தோக் Akmal Saleh முன்மொழிந்துள்ளார். பெரிக்காத்தான் கூட்டணியும் ஒற்றுமை கூட்டணியும் என இரு பெரும் அரசியல் கூட்டணிகளிடையே நிலவும் உட்கட்சி பூசல்களால் அம்னோவும் பாஸ் கட்சியுமே அதிகம் பாதிக்கப்படுவதால் அம்னோவும் பாஸ் கட்சியும் இணைய வேண்டிய நேரம் இது என  Akmal Saleh தெரிவித்துள்ளார். 

குறிப்பாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து உருவாக்கிய Muafakat Nasional கூட்டணியை மீண்டும் அமைக்க வேண்டும் என Akmal Saleh வலியுறுத்தியுள்ளார். 2018 தேர்தலுக்குப் பின்னர் மகாதீர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சியில் அம்னோவும் பாஸ் கட்சியும் எதிர்கட்சியாக இருந்தனர். அப்போதைய காலத்தில் வலுவான ஒரே கூட்டணியாக இருக்க வேண்டும் என அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து 2019இல் மகாதீர் அன்வார் கூட்டணிக்கு எதிராக Muafakat Nasional கூட்டணியை உருவாக்கினார். 2020-இல் மகாதீர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து  பாஸ் கட்சி Muafakat Nasional கூட்டணியிலிருந்து விலகி முகைதீனை ஆதரித்ததும் அம்னோவும் Muafakat Nasional கூட்டணியைக் கைவிட்டது. 2021 ஆம் ஆண்டு முகைதீன் தலைமையிலான பெர்சத்துவையும் Muafakat Nasional கூட்டணியில் இணைக்க வேண்டும் என பாஸ் கட்சி அம்னோவுக்கு அழைப்பு விடுத்தது. அம்னோ ஒரு முறை பாஸ் கட்சியை நம்பி Muafakat Nasional கூட்டணியை அமைத்தது போதும் என்றும் துரோகிகளுடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியாது என்றும் பாஸ் கட்சியின் கோரிக்கையை அம்னோ நிராகரித்தது.

இப்போது பாஸ் கட்சியும் அம்னோவும் இணைந்து செயல்பட முக்கியமான நேரம் இது என அக்மால் சலே தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *