டி.ஏ.பி இருக்கும் வரை அம்னோவுடன் பாஸ் கட்சி இணையாது! – பாஸ் உறுதி!
- Thinagaren Sanggaren
- 02 Jan, 2026
ஜனவரி 2,
அம்னோ இப்போது டி.ஏ.பியுடன் ஒட்டி உறவாடுவதால்
MUAFAKAT NASIONAL எனும் அம்னோ பாஸ் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இல்லை என பாஸ் கட்சியின் இளைஞர்
பிரிவுத் தலைவர் Afnan
Hamimi உறுதிப்படுத்தினார். பாஸ் கட்சியும் அம்னோவும்
இணைவதில் எந்தவொரு கொள்கை முரணும் இல்லை என்றாலும் டி.ஏ.பியுடன் அரசியல் உறவை ஏற்படுத்தியிருக்கும்
அம்னோ முழுமையாக இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதிலிருந்து தவறியிருப்பதாக Afnan Hamimi தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின்
நலனைப் பாதுகாக்கும் பாஸ் கட்சியின் அடிப்படை கொள்கையைப் பாதிக்கும் டி.ஏ.பி போன்ற
அரசியல் கட்சிகளுடன் பாஸ் கட்சி விலகியே இருக்க விரும்புவதால் டி.ஏ.பியுடன் கூட்டணியில்
இருக்கும் அம்னோவுடனும் விலகிய இருக்க வேண்டிய கட்டாயம் பாஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக
Afnan Hamimi தெரிவித்தார். பெரிக்காத்தானும் அம்னோவும் இணைவதற்கு அரசியல் மட்டத்தில் ஆதரவு
பெருகி வருவதையும் பாஸ் கட்சி உணர்ந்திருப்பதாக Afnan Hamimi தெரிவித்தார்.
ஆனால் குறுக்கே டி.ஏ.பி இருப்பதால் MUAFAKAT NASIONAL எனும் அம்னோ பாஸ் கூட்டணியை அமைக்க வாய்ப்புகள்
மிகவும் குறைவாக இருக்கிறது என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் Afnan Hamimi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



